Apr 30

ஐ.பி.எல்.திருவிழா; பஞ்சாப் இலகு வெற்றி

ஐ.பி.எல்.தொடரின் 36ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில்  வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணித்தலைவர் மேக்ஸ்வெல் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி சந்தீப் ஷர்மாவின் அபார பந்து வீச்சால் 67 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 

பின்னர் 68 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

மார்ட்டின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

அம்லா நிதானமாக விளையாட மார்ட்டின் கப்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ட்டின் குப்தில் 27 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ஓட்டங்கள் எடுத்தும், அம்லா 20 பந்தில் 16 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மூலம் 5ஆவது இடத்தில் உள்ளது.

டெல்லி 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.