Mar 05

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம்

இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மாகாண மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியியிட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சின் ஊடக இணைப்புச் செயலாளர் எம்.டி. வன்னிநாயக்க  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

42 படகுகளை விடுவிப்பது பற்றி பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கை அரசு முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு இந்திய அரசு சாதக சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கான பிரதியுபகாரமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது.

ஆனாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்களால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மீனவர் பிரச்சினை பற்றி பேசுவதற்காக இந்திய மீன்பிடி  அமைச்சர் ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

அதன்பின்னர் சகல தரப்புடன் பேசப்பட்டு முடிவொன்று எடுக்கப்படும் என்றார்.