Apr 30

காங்கேசன்துறைப் பகுதிக்கு வெளிநாட்டவர்களுடன் வந்த படகு பிடிபட்டது

வெளிநாட்டவர்களுடன் காங்கேசன்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த படகு கடலோர காவல் படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

மிலான்மாரைச் சேர்ந்த 30 பேரும் இந்தியர்கள் இருவரும் இந்தப் படகில் இருந்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகத்தின் பேரில் இந்தப் படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்டதாகவும், கங்கேசன்துறையிலிருந்து சுமார் 12 மைல் தொலையில் இந்தப் படகு அப்போது காணப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.