Mar 05

சர்வதேச நாணய நிதியமுகாமைத்து பணிபாளரின் விஜயம் ரத்து

இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொள்ள விருந்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா லகார்ட் இறுதி நேரத்தில் தனது விஜயத்தை இரத்துச் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது இலங்கை விஜயத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளதாவது, 

எதிர்பாராத விதமாக இலங்கைக்கான அவரது விஜயத்தின் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது. ஆகவே இத்தருணத்தில் அவரால் அவ்விஜயத்தை மேற்கொள்ள முடியாது. 

அத்துடன் அவர் இம்மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள மட்டார். வெகு விரைவில் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலை அறிவிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.