Apr 30

த.தே.ம. முன்னணியின் மேதின ஏற்பாட்டு வேலைகள் மும்முரம்

நாளை நடைபெறவுள்ள மே தின நிகழ்வுக்காக மக்களை அணிதிரட்டும் பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது.

தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்ற பிரசாரப் பணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் யோ.ஜெயக்குமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி இளைஞர் அணித் தலைவர் வேணுகோபன் ஆகியோர்  தலைமையில் நகரில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள்இ மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மேதின நிகழ்வு பற்றிய துண்டுப் பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.