Apr 29

ஐ.பி.எல் திருவிழா; சொதப்பியது ரோயல் வென்றது புனே

ஐ.பி.எல். தொடரில் இன்றைய  34ஆவது போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. 

நாணயச்சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 158 ஓட்டங்கள்  எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டிராவிட் ஹெட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். 

ஹெட் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் வழக்கம்போல் சொதப்ப ஆரம்பித்தனர். விராட் கோலி ஒருபக்கம் நிலையாக நிற்க, மறுபுறத்தில் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். 

விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் இரட்டை இலக்க பந்துகளை சந்திக்கவில்லை. ஜாதவ் 12 பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

டி வில்லியர்ஸ் (3), சச்சின் பேபி (2), ஸ்டூவர்ட் பின்னி (1), நெஹி (3), மில்னே (5), பத்ரி (2) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, விராட் கோலி 48 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ஓட்டங்கள்; எடுத்து ஆட்டம் இழந்தார்.

அரவிந்த் (8), சாஹரல் (4) அவுட்டாகாமல் இருக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புனே அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றிற்கு செல்ல முடியும் என்ற நிலையில், பெங்களுரு அணி மீண்டும் சொதப்பி, வாய்ப்பை இழந்ததுள்ளது.