Apr 29

ஐ.பி.எல் திருவிழா; பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது ஐதராபாத்

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை ஐதராபாத் மீண்டும் வீழ்த்தி 5ஆவது வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல் தொடரில் மொகாலியில் 33ஆவது  ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களைக் குவித்தது.

தவான் 63 பந்தில் 77 ஓட்ஙகளையும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம்சன் 27 பந்தில் 54 ஓட்டங்களையும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் வார்னர் 27 பந்தில் 51 ஓட்டங்களையும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். 

மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும், மொகித்சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஷோன் மார்ஷ் 50 பந்தில் 84 ஓட்டங்களை எடுத்தார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அவரது ஆட்டம் பலன் இல்லாமல் போனது. ஆசிஷ் நெக்ரா, சித்தார்த் கவூல் தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.