Mar 05

தமிழக மக்கள் மீது மும்முனைத் தாக்குதல்

தமிழகத்தில் வற் வரி உயர்வு தான் பெற்றோல், டீசல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

திருச்சி, அரியலூர் மாவட்ட புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் இன்று திருச்சியில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்பதற்கு வருகைதந்திருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தாது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போதுதான் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பைசாக்கள் அடிப்படையில்தான் உயர்த்துகின்றன. விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

மத்திய அரசு இதுவரையில் 36 முறை விலைக்குறைப்பு செய்துள்ள நிலையில் தமிழக்தில் ஒருமுறைகூட தமிழக அரசு விலைக்குறைப்பு செய்யவில்லை  என்றார்.