Nov 04

சு.ப.தமிழ்ச்செல்வனின் 10ம் ஆண்டு நினைவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட இணைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது தமிழ்ச்செல்வனின் உருவப்படத்திற்கு வருகை தந்தோர் மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அகவணக்கம் செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.