Apr 29

தன்னார்வத் தொண்டர்களை கௌரவிக்கும் ஒன்ர்ராரியோ மாகாண அரசு

ஒன்ராரியோ மாகாண அரசு ஒவ்வொரு வருடமும் தன்னார்வத் தொண்டர்களுக்கான விருதுகளை வழங்குவதன்மூலம் அவர்களது சேவைகளை கௌரவித்து வருகின்றது.

2017 ஆம் ஆண்டில், 11,000 தன்னார்வத் தொண்டர்களை கௌரவிக்கும் முகமாக 40 இடங்களில் 58 விருது வழங்கும் விழாக்கள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்ராரியோ குடிவரவு  அமைச்சர் லாரா அல்பனீஸ் அவர்கள் அண்மையில் ஒன்ராரியோவின் Barrie நகரில் நடைபெற்ற தன்னார்வத் தொண்டர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இவ்விழாவின் போது Barrie பிராந்தியத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.

இங்கு விருது பெற்ற தொண்டர்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், முதியோர் நிலையங்கள் போன்ற இடங்களில் சேவையாற்றியமைக்காக கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் லாரா அல்பனீஸ், “தன்னார்வத் தொண்டர்களின் அர்பணிப்பான சேவை மகத்துவமானது, ஒன்ராரியோவில் இயங்கும் 50% இற்கும் மேற்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் தன்னார்வத்தொண்டர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலேயே இயங்குகின்றன” எனக் குறிப்பிட்டார்.