Apr 29

ரொரன்டோ தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் கலந்துரையாடல் இன்று

ரொரன்டோ தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ரொரன்டோ தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

"ஈழத் தமிழர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்" என்ற தலைப்பில் இந்தங் கலந்துரையாடல் இடம்பெறவிருக்கின்றது. "சிங்கள பௌத்தத்தின் பதிவுகள்" என்ற தலைப்பில் என்கே.மகாலிங்கமும், "தென்னிந்திப் பதிவுகள்" என்ற தலைப்பில் கலாநிதி நா.சுப்பிரமணியனும், "ஈழத் தமிழரின் பதிவுகள்" என்ற தலைப்பில் கலாநிதி பால சிவகடாட்சமும் உரையாற்றுவார்கள்.

அனுமதி இலவசம் எனவும் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுவதாகவும் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.