Apr 29

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்  மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் சமுக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.