Apr 29

தீர்வு கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்

எந்தவிதமான தீர்வையும் வழங்காது நாட்கணக்கில் வீதியில் எம்மை அலையவிட்டு இழுத்தடிப்பு செய்து எமது போராட்டத்தை மழுங்குற செய்ய இந்த அரசு முயற்சிக்கலாம் ஆனாலும் நாம் தொடர்ந்து வெற்றிபெறும்வரை போராடுவோம்  என்று கேப்பாபுலவுவில் போராடும் மக்கள் தெரிவித்தனர்.

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை  விடுவித்து சொந்த நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச்  மாதம்  முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.