Apr 29

சுன்னாகம் சித்திரவதை கொலை; 3ஆம் திகதி இரு தரப்பு தொகுப்பு


யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கைதியொருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் யாழ்.மேல் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த சித்திரவதை வழக்கில் இருதரப்பு தொகுப்புரைக்குமாக எதிர்வரும் 03ஆம் திகதிக்கு வழக்கு  திகதியிடப்பட்டது.

 

கடந்த 2011ஆம் ஆண்டு புன்னாலைகட்டுவன் பிரதேசத்தில் திருட்டு குற்றச்சாட்டு சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை அன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார உட்பட மேலும் ஏழு பொலிஸார் சேர்ந்து சித்திரவதை செய்து கொலை செய்து சடலத்தை கிளிநொச்சியில் உள்ள குளமொன்றில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

 

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  குறித்த எட்டு பொலிஸாருக்கும் எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சித்திரவதை வழக்கும், ஜந்து பொலிஸாருக்கு எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கொலை வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

 


இந்நிலையில் யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த சித்திரவதை வழக்கு   நேற்றைய தினம் இருதரப்பு வழக்கு தொகுப்புரைக்காக திகதியிடப்பட்டது.