Apr 29

வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்கள் இருவர் விடுதலை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா   படுகொலை வழக்கின்  சந்தேகநபர்களில் இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுதலை செய்துள்ளது.

 

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜோஜ் மகிழ் மகாதேவா குறித்த இருவரையும்  சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய விடுதலை செய்து உத்தரவிட்டார்.