ஐ.நா.சபையில் பரதமாடவுள்ள ஐஸ்வர்ஜா தனுஷ்
உலக மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடிகர் ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடவுள்ளார்.
மார்ச் 8 ஆம் திகதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா. சபையில் அரங்கேற்ற இருக்கிறார்.
இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.