Apr 29

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் இராஜினாமா செய்யவேண்டும்; ஆனந்தசங்கரி

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

 

யாழ்.காங்கேசன்துறை வீதி நாச்சிமார்கோவில் பகுதியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று டைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே  அவர்  இதனைத் தெரிவித்தார்.

 

தமிழர்கள் ஒற்றமையாக இருக்கவேண்டும். ஒரே கூரையின் கீழ் வரவேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புகழ் பெற்றுவரும் சர்வதேச ரீதியில் பெயர் பெற்றவருமான தராகி சிவராம் போன்றவர்களின் ஆளுகையை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கடமைப்பட்டுள்ளது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தரகாசி சிவராம் போன்றவர்களின் ஆசையாக இருந்தாலும் அதனை நிர்ணயித்தவர் தந்தை செல்வாவே ஆகையால் அவரால் உருவாக்கப்பட்ட கட்சி தமிழர்களின் ஒருங்கமைக்காக ஒரு குடையின் கீழ் செயற்படத் தீர்மானித்துள்ளோம்.

 

தந்தை செல்வா ஜீ ஜி பொன்னம்பலம் போன்ற எமது மூதாதையர்கள் தீர்மானித்தபடி தமிழர் விடுதலை கூட்டணிக் கட்சி தமிழர்களின் கட்சியாக செயற்படும் இதில் அனைவரும் சேர்ந்து செயற்படமுடியும்.


தமிழ் மக்களை கூட்டமைப்பு தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. அரசுடன் இணைந்து மக்களின் நலனின் அக்கறை காட்டாது செயற்படுகின்றது இவர்கள் அனைவரும் பதவிவிலக வேண்டும்.

 

மக்கள் தற்போது வீதிகளில் போராடுகிறார்கள் இவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதா மக்களின் காணிகளில் இராணுவ அரசியல் கைதிகள் விடுதலையில் கால இழுத்தடிப்பு என இதற்கு முடிவு காணப்படவில்லை.

 

தற்போதைய சூழலில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுத்து இராணுவ முகாமை மூட உத்தரவிடவேண்டும் இதற்காக ஜனாதிபதியுடன் பேசி எச்சரிக்கை தெரிவிக்கவேண்டும் இதனை விடுத்து இராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடாத்தி இடங்களை பார்க்கிறார்கள்.


எமக்கு துரோகம் செய்தது இராணுவம் அவர்களுடன் பேச்சுவார்த்தை செய்கின்றார்கள் தற்போதைய நிலையில் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு தேவை ஆகாயால் இதனைப் பயன்படுத்தி இராணுவ முகாம்களை மூடிவிடவேண்டும்.

 

 அரசியல் கைதிகள் விடயத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தின்போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆகையால் இன்று 7 வருடங்கள் ஆன நிலையில் எதற்காக அவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.


ஆகவே மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தமது பதவிகைள இராஜினாமா செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.