Apr 28

ஐ.பி.எல் திருவிழா; இலகு வெற்றி பெற்றது குஜராத்

ஐ.பி.எல். தொடரின் 31ஆவது ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. 

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற குஜராத் அணி தலைவர் ரெய்னா முதலில் பந்து வீச தீர்மானித்தார். 

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக நெகி (32), ஜாதர் யாதவ் (31) ஓட்டங்களை எடுத்தனர்.

அதிரடி ஆட்டக்காரர்களான அணித்தலைவர் விராட் கோலி, கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் சொற்ப ஓட்டங்களில்; ஆட்டமிழந்தனர். குஜராத் அணியில் டையி 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனையடுத்து 135 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 28 ஓட்டங்களை 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும் அணித்தலைவர் ரெய்னா மற்றும் பிஞ்ச் இருவரும் ஜோடி சேர்ந்து ஓட்டங்களைக் குவித்தனர். ரெய்னா நிதானமாக ஆட பிஞ்ச் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 

பிஞ்ச் 34 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். அவர் 6 சிக்ஸர்களை விளாசினார். பின்னர் ரெய்னா பவுண்டரிகளாக விளாசி வெற்றியை உறுதி செய்தார். ரெய்னா 30 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

குஜராத் அணி 1.5 ஓவர்களில் 135 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.

3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த டையி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் 7-வது 6ஆவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.