Mar 05

சுசித்திராவுக்கு எதிராக முறைப்பாடு

சமூக வலைதளங்களில் தவறான படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்கள் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளதாக பாடகி சுசித்ரா மீது இந்திய தேசிய லீக் கட்சியினர் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சினிமா பின்னணி பாடகியும், தொகுப்பாளருமான சுசித்ரா, தனது டுவிட்டர் பக்க ஆபாச படங்களால் 10 நாட்களாக பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதில், தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி நடிகர், நடிகைகளின் லீலைகள் என்ற பெயரில் அவர்களின் அந்தரங்க படங்களும், ஆபாச படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நடிகர் தனுஷ்வின் ஆட்களால் சுசித்ரா தாக்கப்பட்டு காயமடைந்துள்ளது போன்ற படமும் வெளியானது. தொடர்ந்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க லீலை படங்கள் டுவிட்டரில் வெளியிடப்படும். சினிமா உலகின் உண்மை முகம் தோலுரித்து காட்டப்படும் என்ற வாசகமும் அதில் பதிவு செய்யப்பட்டது. இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் பாடகி சுசித்ரா மீது சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தவறான படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்கள் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளது. ஆகவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.