Oct 30

துப்பாக்கிச் சூட்டுச் சதி அரசியல் ரீதியில் திசை திருப்பும் முயற்சியின் சதியா ?

ந.லோகதயாளன்.

2016ம் ஆண்டு  வாள்வெட்டு தலை தூக்குவதாக பொலிசாருக்கு எதிராக எழுந்த குற்றச் சாட்டை மழுங்கடிக்க இரண்டு பல்கலைக் கழக மாணவர்களின் உயிர் கொக்குவிலில் காவு கொள்ளப்பட்டது. வடமராட்சியில் கள்ள மண் ஏற்றுபவர்களிடம் பொலிசாரே கப்பம் வாங்குவதான குற்றச் சாட்டு உச்சம் பெற்றபோது  துண்ணாலை இளைஞன் மீதான துப்பாக்கிச் சூடு நடாத்நப்பட்டு ஒரு உயிர் பலி கொடுக்கப்பட்டது. உலகமே உற்றுநோக்கிய ஓர் வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்தவேளையில் நீதிபதி  இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூட்டுச் சதி இடம்பெற்றது.  தற்போது அரசியல் யாப்பு விவாதம் என்னும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளபோது  ஓர் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளமை வடக்கை தொடர்ந்தும்  பதற்றத்தில் வைத்திருந்து அரசியல் ரீதியில் திசை திருப்பும் முயற்சியின் சதியா ? என்றே எண்ணத்தோன்றுகின்றது.

ஏனெனில் இலங்கை அரசியலில் புரையோடிப்போயுள்ள சூழ்ச்சிகள் , தந்திரங்கள் இன்றுவரை அகலவே இல்லை. தமிழ் மக்கள் நின்மதியாகவோ அல்லது நிரந்தரத் தீர்வுடனோ வாழவே கூடாது என்பதில் சிங்கள தேசம் என்றுமே உறுதியாகவுள்ளதுடன் இந்த விடயத்தில் ஒற்றுமையாகவும் உள்ளது. காலத்திற்கு காலம் அரசியல் ரீதியிலானாலும் சரி அல்லது இராணுவ ரீதியிலானாலும் சரி தமிழர் தரப்பிற்கு ஓர் படி முன்னேற்றம் ஏற்படும் எனக்கண்டுகொண்டால் சிங்கள தேசம் அதனை மழுங்கடிப்பதற்காக அதனைவிட பூதாகாரமான ஓர் விடயத்தினை கிள்ளிவிடுவது வழமை . அதனை கனகச்சிதமாக நிகழ்த்திய பலர் இன்றைய ஆட்சியிலும் உள்ளனர். 

அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி என்பர் எமது நாட்டில் ஆட்சியாளர்கள் எவ்வழியோ அரச படையினரும் அவ்வழியே என்ற மரபையே பின்பற்றுகின்றனர். அதாவது அரசியலில் தமிழர்களிற்கு ஏதும் கிடைக்க கூடாது என்பதற்கு சதிசெய்கின்றனர். படையினரும் தமது தரப்பிற்கும் அதேசதியை பயன்படுத்துகின்றனர் என்பதே தமிழர்களின் கணிப்பு. ஏனெனில் வடக்கில் குறிப்பாக 2015 மற்றும் 2016களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள்வெட்டுக் கலாச்சாரம் தலைதூக்கியது. அப்போது அதனை அடக்க  வேண்டிய பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். அத்தோடு அந்தக் குழுக்கழிற்கும் பொலிசாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனால் வாள்வெட்டை அடக்கவேண்டிய தேவை அல்லது மறைக்க வேண்டிய தேவை பொலிசாருக்கு எழுந்த்து. அதன் விளைவே 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ம் திகதி இரு பல்கலைக் கழக மாணவர்களின் பலியெடுப்பாக திகழ்ந்த்து. இதழ் பின்னர் வாள்விட்டிற்கும் தீர்வில்லை. சுட்டுப்படுகொலை செய்தவனிற்கும் நீதியில்லை என ஓர் ஆண்டும் கடந்து விட்டது. இந்த நிலையிலேயே மணல்கொள்ளை மணல் தட்டுப்பாடு என்பன பூதாகாரமாக பேசப்பட்டபோது சிலரிடம் பொலிசாரே கப்பம் பெற்று அவர்களை மணல் கடத்த அனுமதிக்கின்றனர் என குடத்தனொ மக்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய நிலையில் இந்த ஆண்டின் யூலை மாத அரம்பத்தில் குடத்தனை இளைஞன் ஒருவனின் உயிர் இதன் பெயரால் பலி எடுக்கப்பட்டது.

இந்த அமளி குடாநாட்டின் ஓர் ஓரத்தில் மட்டும் நின்றுவிட்டபோது உலகமே எதிர்பார்க்கப்பட்ட ஓர் வழக்கின் நீதிபதியான இளஞ்செழியன் மீதான ஓர் தாக்குதல் முயற்சி ,கடந்த யூலை மாதம் 23ம் திகதி  தமிழ் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த சிந்தனை கவனம் எல்லாம் இவ்விடத்திற்குள் திருப்பி மட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 

இவ்வாறான ஓர்  சதிப் பட்டியலிலேயே ஒக்டோபர் 22ம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் பகுதியிலும்  பயன்படுத்திய அரச படையினரே மேற்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் முப்படைகளின் தளபதிகள் மட்டும் மாற்றப்படுகின்றபோதும் படையினர் என்வோ மகிந்த காலத்தில் இருந்த படையினரே  தற்போதும் படையிலும் உள்ளனர்.  இலங்கையில் தற்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் இராணுவம் உள்ளபோதும் 30 ஆயிரம் கடற்படையினரை வைத்தே அதிக  சதிகள்  அரங்கேற்றப்பட்டுள்ளமையும் தற்போது வெளித் தெரிந்தநிலையில் யாழ்ப்பாணம் சம்பவத்திலும் அவர்களின் பக்கமே விரல் நீட்டப்படுகின்றது.  

முதல் ஒரு அரசியல் யாப்பு எழுத மறுதரப்பு பாதயாத்திரை சென்று அதை இல்லாமல் செய்ததும் அதேபோன்று இன்னுமொரு்தரப்பு எழுதும்போது்மறுதரப்பு அதனை நாடாளுமன்றில் கிழித்தெறிந்த்து்மட்டுமன்றி கொழுத்திய நிகழ்விகளும் உண்டு் அதாவது இரு பெரும் தேசியக் கட்சிகளும் மாறி மாறி எதிர்த்த கட்சிகள் இன்று ஒன்று சேர்ந்து நாட்டு மக்களின் மனதைப் புரிந்து்அதிகாரம் மிக்க புதிய்யாப்பைத் தருவார்களா ? அல.லது இரு கட்சியும் இணைந்தமையினால் எதிர்ப்பதில் ஒற்றுமையை கான்பித்து கிடைப்பதையும் பெடுப்பார்களா என்கின்ற ஐயமும் உண்டு.

இவன்றினையும் தாண்டி எதாவது கிடைக்குமா என ஏங்கி காத்திருக்கும் தமிழர்களை திசைதிருப்பி்அதன் மூலம் இளையோர்களை ஆத்தி்ரமூட்டி மீண்டும் ஓர் இளைஞர்கள் அழிப்பிற்கு சிலர் போட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லையா? 

எனவும் ஆராயவேண்டிய சூழலுலேயே உள்ளது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டால் போராட்டம் கதவடைப்பு என பல நாட்கள் அப்பக்கமே திசை திருப்பப்படும் என்று எண்ணியவர்களிற்கும் குறித்த பகுதி இளைஞர்கள் அவ்வாறு எதிலுமே ஈடுபடாது தமதெ இறப்புக்கு மட்டும் நீதியை கோரிநிற்குன்றனர்.

இப்போது இலங்கை அரசியலில் என்ன இடம்பெறுகின்றது என எவருக்குமே விளங்காதநிலமை கானப்படுவதுபோல் நாட்டின் ஜனநாயகம் , மற்றும் பாதுகாப்பு , எவற்றிலுமே என்னதான இடம்பெறுகின்றது உண்மையில் எவர் அதிகாரம் கொண்ட முடிவினை எடுக்கின்றனர் என்பது தொடர்பில் எவையுமே தெரியாத மூடிய ஆட்சியாகவே உள்ளது. இங்கே   ஜனாதிபதியை மிஞ்சிய முடிவினை எடுக்கும் சட்டமா அதிபர் இவ்வாறு இடம்பெறும் மர்மக் கொலைகள் தொடர்பில் வாய் திறப்பதே கிடையாது.

அல்லது அதற்கு உரிய சட்ட நடவடிக்கையும் கிடையாது. சாட்சிகளிற்கு பாதுகாப்பில்லை எனக்கூறி சட்டத்தில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்ட ஓர் ஏற்பாட்டின் மூலம் வவுனியாவில் இடம்பெறும் வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றத்துடிக்கும் சட்டமா அதிபர் இங்கே ஒரு மாகாணத்தின் மக்களே பாதுகாப்பின்றி வாழ்வதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று வினாவினால் அதன் பதில் பூச்சியமாகவே உள்ளது. அதற்கும் அவரை கூறிப் பயன் இல்லை ஏனெனில் ஒரு சாட்சியை பாதுகாக்கமுடியாத கையறுநிலையில் உள்ளவரிடம் ஒரு மாகாணத்தில் உள்ள 15 லட்சம் பாதுகாப்பை கோருவதும் எமது அறியாமையாகவே இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.