Mar 05

டுபாய் டெனிஸ் தொடரில் ஆன்டி முர்ரே சம்பியன்

டுபாய் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

23 ஆண்டு கால துபாய் டென்னிஸ் வரலாற்றில் இந்த பட்டத்தை இங்கிலாந்து வீரர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை  இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா) மார்சின் மேட் கோவ்ஸ்னி (போலந்து) ஜோடி 6-4, 3-6, 3-10 என்ற செட் கணக்கில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஹோரியா டெகாவ் (ருமேனியா இணையிடம் தோற்று சாம்பியன் பட்ட வாய்ப்பை நழுவ விட்டது.