Apr 27

போராட்டத்திற்கு கிளி. பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆதரவு

 வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.

 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கிவரும் முப்பது கிளை நிலையங்கள் மற்றும் கிளிநொச்சி கரடிப்போக்கில் அமைந்துள்ள சங்கத்தின் பிரதான தலைமைச் செயலகம் என்பன முற்றாக மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாகவும் கூறினார்.