Apr 27

மாவையின் கருத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்; ஆனந்தநடராஜா லீலாதேவி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என எங்கள் முன் தெரிவித்திருந்தார். இக் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 இதனால்தான் அவர் அவ்வாறு குறிப்பிடும் போது அந்த இடத்தைவிட்டு வெளிநடப்புச் செய்தேன் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தநடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.