Mar 05

ரென்ஷா,மார்ஷ் அரைச்சதம்; ஆஸி.237/6

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களை குவித்து 48 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸில் 189 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

டேவிட் வோர்னர்(33), ஸ்டீப் ஸ்மித் (08), ரென்ஷா(60), ஹான்ஸ்கொம்ப்(16), மிச்சல் மார்ஷ்(00), ஷோன் மார்ஷ்(66) என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நேர நிறைவில் மத்தியூ வெட் (25), மிச்சல் ஸ்டார்க்(14) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 

ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.