Apr 27

பிரித்தானியாவை எச்சரிக்கும் ரஷ்ய செனட்சபை உறுப்பினர்

பிரித்தானியாவானது ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புட்டினுடன் அணு ஆயுதப் போரொன்றை ஆரம்பிக்கும் பட்சத்தில்  அந்நாடு பூண்டோடு அழிக்கப்படும் என ரஷ்ய செனட்சபை உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவ கேணலான  பிரன்ட்ஸ் கிலின்ட்செவிக்கே (59  வயது) இவ்வாறு எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்  பெருந்தகை  மைக்கேல் பல்லொன்  அணுசக்தி பாதுகாப்பு தொடர்பில்  தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே  பிரன்ட்ஸ்  மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் தீவிரமான சூழ்நிலையில்  அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி முதல் தாக்குதல் நடத்தபடுவதை தவிர்க்க  முடியாது என்பதை நாம் உங்களுக்கு  தெளிவுபடுத்துகிறோம்"  என மைக்கேல் பல்லொன்  தெரிவித்திருந்தார்.