Apr 27

சீனாவின் புதிய விமானந் தாங்கிக் கப்பல்

சீனாவானது  புதிய விமானந் தாங்கிக் கப்பலொன்றை  நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளது.

இது  அந்நாட்டின்  இராணுவ பலம் அதிகரித்து வருவது தொடர்பான பிந்திய அடையாளமாக நோக்கப்படுகிறது.

லியோனிங்  என்ற கப்பலுக்கு பின்னரான அந்நாட்டின் இரண்டாவது விமானந் தாங்கிக் கப்பலான மேற்படி கப்பல்உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கிக் கப்பலாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இதுவரை பெயரிடப்படாத அந்தக் கப்பல்   வட கிழக்கு துறைமுகநகரான டாலியனுக்கு அருகிலுள்ள நீர்ப்பரப்பில்  தரித்துள்ளது. அது 2020  ஆம் ஆண்டுக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என  அங்கிருந்த வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.