Mar 05

8 விக்கெட்டை வீழ்த்தியதன் இரகசியம் என்ன?

இந்தியாவுக்கு எதிராக தற்போது பெங்களுரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நெதன் லயன் முதல் இன்னிங்ஸில் 50 ஓட்டங்களை கொடுத்து  8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவை சொந்த மண்ணில் சாய்த்தார்.

எவ்வாறு இந்திய மண்ணில் பிரகாசிக்க முடிந்தது என்பதற்கான காரணத்தை தற்போது போட்டு உடைத்திக்கிறார் நெதன் லயன், 

நான் அஸ்வின் பந்து வீசிய ஏராளமான வீடியோக்களை பார்த்தேன். அதனடிப்படையில் பந்து வீச முயற்சி செய்தேன். அத்துடன் என்னுடைய பவுன்சர் முறையையும் சேர்த்து அபாரமாக பந்து வீசினேன் 

எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரம் எனக்கு மிகப்பெரியதாக அமைந்தது.

என்னுடைய அபார பந்து வீச்சால், முதல்முறையாக இந்திய மண்ணில் சிரிப்பை வெளிப்படுத்துகிறேன் என்றார்.