Apr 25

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு; உடன் விசாணைக்கு மறுப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் தொடர்பான வழக்கு விரைந்து முடிக்க பேரறிவாளன் தரப்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க இயலாது என்று உச்சநீமீதிமன்றம் தெரிவித்துள்ளது

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.

தமிழக அரசு கடந்த 2000ஆம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-இன் படி நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

மேலும் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் 7 பேரின் விடுதலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது.

 இந்த வழக்கும் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை உடனே விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் 7 பேரின் விடுதலை மீண்டும் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.