Oct 24

ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கார்ட்போர்டு வீடு; நெதர்லாந்து எஞ்சினியர்கள் சாதனை

ஆடம்பரமான, அனைத்து வசதிகளும் கூடிய கார்ட்போடு வீடுகள் தற்போது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் புகழ்பெற்று விளங்குகிறது.

ஒரே ஒரு நாளில் கட்டிமுடிக்கப்படும் இந்த வீட்டை கட்டி முடிக்க சுமார் ரூ.22 லட்சம் மட்டுமே செலவாகிறது. வாட்டர் புரூப் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த வீட்டுக்கு கியாரண்டியும் உண்டு.

மேலும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மிக எளிதாக பிரித்து மாட்டும் வகையில் உள்ள இந்த வீட்டிற்கு அந்நாட்டு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக இந்த வீட்டை டிசைன் செய்த எஞ்சினியர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.