Oct 24

இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றி சமூகத்தின்பால் செயற்பட்ட பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று  வவுனியாவில் இடம்பெற்றது.

நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் பணிப்பாளர் அ. நபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 

மலையக கலைகலாசார மன்றம்  சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகளை வழங்கியிருந்தது.

 வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம்இ  ந.கபில்நாத்  எஸ்.கஜேந்திரகுமார்   கே.வசந்தரூபன் எம். ஜி.ரட்ணகாந்தன், க.வரதகுமார் மற்றும் சிங்கள ஊடகங்களில் கடமையாற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட 10 ஊடகவியலாளர்களுக்கும்இ சமூக சேவைகள் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றியவர்களுமாக 44 பேருக்கும் இவ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.