Oct 21

நிலவில் பூமி உதயம் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

நாசாவின் லூனர் விண்கலம் Orbiter நிலவு சுற்றி வரும் பாதையின் படக்காட்சியினை பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த படம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தி உயர்ந்த ரெஸ் சுருக்க ஆங்கிள் கேமராவின்  உதவி கொண்டு இரண்டு வெவ்வேறு கோணத்தில் அக்டோபர் 12 அன்று எடுக்கப்பட்டது. தற்போது லூனர் விண்கலம் சுமார் 3,850 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணம் மேற்கொள்கிறது.

இந்த விண்கலம் பூமி மற்றும் சந்திரனின் இயக்கம் பற்றியும், நிலவின் பள்ளம் பற்றியும் படம் பிடித்து காட்டியுள்ளது. அதில் ஆப்ரிக்க கண்டத்தின் பகுதிகளையும் இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. முதன் முதலாக Apollo விண்வெளி வீரர் ஹரிசான் வுமிட் 1972 டிசம்பர் 7-ம் தேதி ப்ளூ மார்பிள் படத்தை எடுத்துள்ளார்.

பூமி உண்மையில் நிலவின் முகட்டு புள்ளியின் அருகே சுற்றி வருகிறது. அது மட்டுமல்லாது பூமியின் உயர் ரெஸ் உதயம் பற்றிய அழகான படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த Earth Rising  படம் பல கோணங்களில் மிக அழகான தொழில் நுட்பத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக Earth Rising படம் 1966-ம் ஆண்டே நாசா எடுத்துள்ளது.

அதில் பூமி நிலவின் முகட்டு புள்ளியில் உதயமாவது போன்ற காட்சி தெரிந்துள்ளது. இந்த படங்கள் பின்னர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வெண்வெளி வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.