Apr 25

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்பு; போக்குவரத்து முடக்கம்

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. ஆனால் அரசு பேருந்துகள் கணிசமான அளவில் இயக்கப்படுகின்றன.

வறட்சி நிவாரண தொகை அதிகரிப்பு, தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.