Oct 20

ஜனாதிபதி தலைமையில் தீபாவளி திருநாள்

உலகவாழ் இந்துக்களால் மிகவும் பக்தி சிரத்தையோடு கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தினால் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்து கலாசார நிகழ்வுகளினால் வண்ணமயமாகிய இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், இராஜங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.