Apr 24

ஐ.பி.எல் திருவிழா; சுருண்டது ரோயல், வென்றது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் 27ஆவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்களுக்கு இடையில்  கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெங்களுர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த  கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நரைன் 34ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். 

132 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களுர் அணியின் கெயில் மற்றும் அணித்தலைவர் விராட் கோலி களம் இறங்கினர். 132 ஓட்டங்கள்; என்பதால் பெங்களுர் அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் அவரை தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன. 

கெயில்(07), மந்தீப் சிங்(01), டி வில்லியர்ஸ்(08), ஜாதவ்(09), பின்னி(08) என்ற அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியாக பெங்களுர் அணி 9.4 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது. 

அபாரமாக பந்துவீசி 3 முக்கிய  விக்கெட்டுகளை  வீழ்த்திய கவுண்ட்டர் நைல்  ஆட்டநாயகன் விருது பெற்றார். வோக்ஸ் மற்றும் கிராந்தோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கவுண்ட்டர் நைல் ஆட்டநாயகனாக தெரிவானார்.