Apr 24

கொடநாடு எஸ்டேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? ; மு.க.ஸ்டாலின் கேள்வி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என திமுக செயல் தலைவர் மு..ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு கொடநாடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மர்மமாக உள்ளது.

எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை தேவை என்பது போல், கொடநாடு எஸ்டேட் காவலாளியின் மர்ம மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

திமுக கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் விவசாயிகளின் நலனுக்காகவே தவிர கூட்டணிக்கானது அல்ல என்றார்