Oct 19

3760 பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை

பெருந்தோட்டத்துறை மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 3760 வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமம் மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இதுதொடர்பாக சமர்ப்பித்த ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹறித்த ரன் என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருடத்தில் நிர்மாணிக்கப்பட்ட 2551 வீடுகளுக்கும் இந்த வருடத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இந்தியாவின் நன்கொடையின் கீழ் முதற்கட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 1134 வீடுகளுக்கும் 2015இல் இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த நபர்களுக்காக மீறிபெத்த என்ற வீடமைப்பு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 75 வீடுகளுக்கும் இந்த காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த காணி உறுதிகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் காணிகளை பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களிடம் இருந்து விடுவித்துக்கொள்வதற்காக மலையக புதிய கிராமம் மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.