Oct 19

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய இரு இளைஞர்களின் சடலங்களும் மீட்பு

முல்லைத்தீவு கடற்பரப்பில் மூழ்கிய இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் நண்பர்களுடன் நீராடச் சென்ற குறித்த இருவரும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.