Apr 24

கனேடியக் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

கனேடிய அரசு,  கனேடியக் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கைகள்  எடுத்துவருவதாக அறியவந்துள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளுக்கு இவ்வலுவலகங்கள் இலக்காகலாம் என்ற அச்சத்தின்பேரிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறியமுடிகிறது.

கடந்த காலங்களில் மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள் , மது போதைப் பாவனையாளர்கள் போன்றோரால் பொதுச் சேவை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு குண்டுத் தாக்குதல் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இனவாதக் கொள்கைகளைக் கொண்டவர்களால் கடவுச்சீட்டு அலுவலகங்கள்  தாக்குதலுக்கு உள்ளாகலாம்  என்ற அச்சத்திலேயே  அவற்றின் பாதுகாப்பை  அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.