Apr 24

அமெரிக்க - அவுஸ்திரேலிய ஒப்பந்தத்தை டிரம்ப் நிர்வாகம் மதிக்கும்: அமெ. துணை அதிபர்

அமெரிக்கா- ஆஸ்திரேலியா ஒப்பந்தம் புதிய முன்னேற்றம், டிரம்ப் நிர்வாகம் மதிக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்கா-ஆஸ்திரேலியாவிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை புதிய அதிபர் டொனல்ட் டிரம்ப் முட்டாள்தனமானது என விமர்சித்திருந்த நிலையில் அந்த ஒப்பந்தம் ஏற்கப்படுவதாக அமெரிக்க தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புலுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் போற்றப்படுவதற்கான அவசியமில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனல்ட் பதிவேற்ற போது அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு, சிரிய அகதிகளுக்கு தடை, ஏழு முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை உள்ளிட்ட முடிவுகளை கொண்ட செயலாக்க ஆணையில் அவர் கையெழுத்திட்டமை அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற கேள்வியினை எழுப்பி இருந்தது. இதைப்பற்றிய டிரம்ப்பின் கடுமையான விமர்சனத்தால் இது தோல்வியடையக்கூடும் என்றுகூட எதிர்பார்க்கப்பட்ட வந்த சூழலில், இப்போது இது புதிய முன்னேற்றத்தினை அடைந்துள்ளது.

ஒப்பந்தத்தின் அம்சங்கள்:

*அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் நவம்பர் 2016 அறிவிக்கப்பட்டது. இது ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டம்.

*இது ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான Nauru, Manus Island, Papua Newguinea வில் உள்ள பல நாட்டு அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த போடப்பட்ட ஒருமுறை ஒப்பந்தம். அதே சமயம் Guatemala, Honduras, El Salvador வில் உள்ள அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் உறுதியளித்திருந்தார்.

*ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், இலங்கை தமிழ் அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

*ஆஸ்திரேலியாவின் கணக்குபடி, மனுஸ் தீவில் 871 அகதிகளும், நவுருவில் 383 அகதிகளுமாக மொத்தம் 1,254 அகதிகள் உள்ளனர். இவர்களையே சட்டத்திற்கு புறம்பான குடியேற்றவாசிகள் என டிரம்ப் இப்போது விமர்சித்துள்ளார்.