Apr 23

விசாரணைக்காக அழைக்கப்பட்ட தினகரனை டில்லியில் முடக்க திட்டம்

டில்லி பொலிஸாரின் விசாரணையில் இருக்கும் தினகரன் விசாரணை முடிந்து சென்னை திரும்புவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபா வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினகரனுக்கு இடைத்தரகராக இருந்ததாக சுகேஷ் சந்திரசேகரையும் கைது செய்துள்ளது டில்லி பொலிஸ்.

அவரிடம் விசாரணை செய்தபோது தினகரன் லஞ்சம் தர முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, டில்லி பொலஸார் சென்னைக்கே வந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து சென்றனர்