Oct 13

மீள ஒப்படைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் ஆறு இழுவை படகுகள்

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்கு சொந்தமான ஆறு இழுவை படகுகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் அத்திமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டபோது இந்த படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 

இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்படமுன்னர் இலங்கை கடற்படையினரால் குறித்த படகுகள் பழுதுபார்த்து பின்னர் ஒப்படைக்கப்பட்டது.

 

கடந்த செப்டெம்பர் மாதம் 30ம் திகதி தொடக்கம் இன்று வரை 20 இழுவை படகுகள் இந்திய அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.