Oct 13

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக நிஸ்ஸங்க நாணயக்கார நியமனம்

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 

அரச பொது நிறுவனங்கள் அமைச்சின் ஆலோசனைப்படி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த சலில முனசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

தாய்வான் வங்கி ஒன்றில் பலகோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சலில முனசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.