Oct 13

இன்றுடன் நிறைவுபெறும் கொழும்பு வான் மாநாடு

இலங்கை விமானப்படையின் மூன்றாவது கொழும்பு வான் மாநாடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இருதினங்களை கொண்டதாக கொழும்பு அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இந்த மாநாடு, தேசிய, பிராந்திய, பூகோள ரீதியில் விமானப்படைகள் எதிர்நோக்கும் சவால்களையும் இயற்கை அனர்த்தகளின் பாதிப்புக்களை தடுக்கும் வழிவகைகளையும் ஆராய்வது நோக்கமாகும்.

 

இலங்கை விமானப்படை மாநாட்டை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த விமானப்படை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவர்.