Apr 23

ஜெ. மரணம்; மோடியிடம் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் சி.பி.. விசாரணை நடத்த வேண்டும்  என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

75 நாட்கள் மரண படுக்கையில் இருந்த ஒரு முதல்வரை பார்க்க வராமலும்,  வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கையும் எடுக்காத பிரதமர் மோடியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.. விசாரணைக்கு .தி.மு..வின் ஒரு அணி கேட்கிறது. ஜெயலலிதா நலமுடன் இருந்தபோது போயஸ் தோட்டத்துக்கு வந்து விருந்து சாப்பிட்ட மோடியால் அவர் மருத்துவமனையில் கிடந்த 75 நாட்களில் ஒரு நாள் கூட அவரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ, அல்லது அதன் செயலாளரோ யாரும் வந்து பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்தார். அதன் பின்னர் 2 ஆண்டுகள் அவர் முதல்வராக பணியாற்றினார். ஆனால் இந்த பிரதமர் மோடியோ பக்கத்து நாடான சிங்கப்பூருக்கு கூட ஜெ.வை கூட்டி செல்லவில்லலை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.