Oct 13

ஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாததை என்னால் எவ்வாறு செய்ய முடியும்?

ஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாததை என்னால் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பாதாக உறுதியளித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று(12) வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்விற்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பிற்கான முன்னெடுப்புகள் பிரிவினைவாத்தை நோக்கியே உள்ளது. எனவே புதிய அரசியலமைப்பு விவகாரம் , இராணுவத்திற்கு எதிரான பழிவாங்கல்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிற்கு தெளிவுப்படுத்தினோம்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அழுத்தத்தில் கொண்டு வரப்பட்ட 13 அரசியலமைப்பு ஊடாக நாடு பிளவுப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜே . ஆர் ஜயவர்தன சில முக்கிய தடைகளை அரசியலமைப்பிற்குள் வைத்துள்ளார்.

அவற்றை நீக்கி முழுமையாகவே பிளவுப்பட்ட இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறைமையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளே புதிய அரசியலமைப்பு ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. எனவே தான் நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுக்கும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதற்கான விவாதத்தில் கூட கலந்துக் கொள்ள போவதில்லை. எவ்வாறாயினும் ஜே . ஆர் ஜயவர்தனவினால் செய்ய முடியாமல் போனதை நான் எவ்வாறு செய்வது என இந்த சந்திப்பின் பேர்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து பதிலளிப்பதாக மேலும் அவர் தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.