Apr 23

ஆஸி.ஆஸி. மீது அணு ஆயுதத் தாக்குதல்; எச்சரித்தது வட கொரியா

வட கொரியாவானது அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக அணு ஆயுதப் போர் ஒன்றை ஆரம்பிக்க  நேரிடும் என  அச்சுறுத்தல் விடுத்துள்ளது.


அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் வட கொரிய அரசாங்க ஊடகத்தில் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 பிராந்தியத்திலான அமெரிக்காவின் நகர்வுகள் தற்கொலைச் செயற்பாடு ஒன்றை ஒத்ததாகவுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

 

அவுஸ்திரேலியா அமெரிக்காவின் அடிச் சுவட்டைப் பின்பற்றி வருகின்ற நிலையில் அந்நாடு அணு ஆயுதத் தாக்குதல் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளதாக  அந்த ஊடகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


வட கொரியாவைத் தனிமைப்படுத்தும் செயற்கிரமத்தில் அவுஸ்திரேலியா அமெரிக்காவைப் பின்பற்றுவதற்கு முன்னர்வட கொரியாவின் ஏவுகணை தாக்கும் தூரத்திற்குள் அந்நாடு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

 

அத்துடன் அவுஸ்திரேலிய வெ ளிநாட்டு அமைச்சர் ஜூலி பிஷொப்பிற்கும் அந்த ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.