Apr 23

அமெரிக்கா-ஜப்பான் கடற்படையினர் கூட்டுப்பயிற்சி

அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திவரும் வட கொரியா நாட்டின் அருகேயுள்ள கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த கடற்படையினர் இன்று கூட்டுப் போர் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சக்தி வாய்ந்த போர் ஆயுதங்கள், ராணுவ டாங்கிகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த பிரமாண்ட அணிவகுப்பு அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகியது.

இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்து உரையாற்றிய அந்நாட்டின் இரண்டாம் நிலை தலைமை அதிகாரியும், ஆளும்கட்சி தலைவரும், இராணுவ தளபதியுமான சோய் ரியாங்-ஹே, ‘வடகொரியா மீது தொடுக்கப்படும் நேரிடையான எவ்விதப் போரையும் நேரடியாக சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை இன்றைய அணிவகுப்பு உறுதிப்படுத்தும். நம்மீது நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலுக்கும், நமக்கே உரிய பாணியில் சரியான பதிலடி கொடுப்போம்’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹார்ல் வின்சன் என்னும் மிகப்பெரிய போர் கப்பலை வட கொரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.