Mar 04

பிரதமர் மோடிக்கு முதல்வர் அகிலேஷ் சவால்

உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட  தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, அகிலேஷ், ராகுல், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் தனது கட்சியான சமாஜ்வாடி உறுப்பினர்களை ஆதரித்து இன்று பாதோகி பகுதியில் உரையாற்றியபோது 

எனது ஆட்சியில் நான் 10 பணிகளை செய்து இருக்கிறேன். அதுபோல பிரதமராக மோடி செய்த 10 பணிகளை  பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? எனது 5 வருட ஆட்சியில் நான் செய்த செயல்கள் குறித்த அறிக்கையை அளிக்க நான் தயாராக உள்ளேன்.

அதுபோல மத்தியில் நீங்கள் செய்த 3 வருட கால ஆட்சியின் அறிக்கையை உங்களால் சமர்ப்பிக்க முடியுமா?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டேன். அந்தப் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 11ஆம் திகதி  ஆரம்பமானது.அன்று 73 தொகுதிகளுக்கான  வாக்குப்பதிவு நடந்தது.

அதனையடுத்து 5 கட்ட தேர்தல்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்று 6ஆவது கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்டத் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி  40 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.