Apr 23

பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தல் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பம்

பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தல் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. பாரிஸ் நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதலொன்று நடத்தப்பட்டதற்கு ஒரு சில தினங்களில் இடம்பெற்ற மேற்படி தேர்தலை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நாடெங்கிலுமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பை  வழங்கும்  முகமாக சுமார் 50,000  பொலிஸ் உத்தியோகத்தர்களும் 7,000  படைவீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் 11  வேட்பாளர்க்ள போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும்  50  சதவீத வாக்குகளை வெற்றிகொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்டுகின்ற நிலையில்,    எதிர்வரும் மே 7  ஆம் திகதி இரண்டாவது சுற்று தேர்தலொன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அந்நாட்டு நேரப்படி காலை 8.00  மணிக்கு ஆரம்பமான தேர்தல்  இரவு 8.00  மணிக்கு நிறைவுபெற்றது. எனினும் பிரான்ஸின்  வெளிநாட்டுப் பிராந்தியங்களில் நேற்று  சனிக்கிழமையே வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பஐதமைவாத கட்சியைச் சேர்ந்த பிரான்கொயிஸ் பில்லொன்,   தீவிர வலது சாரி கட்சியைச் சேர்ந்த லீ பென், தாராள மத்தியவாத கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரோன் மற்றும் தீவிர இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜீன் -லக் மெலென்சொன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.