Oct 13

சத்யா தயாரிக்கும் படத்தில் இணையும் சிநேகன்-ஓவியா

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றாலும் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் ஓவியாதான்.

பெண்களில் இவர் என்றால், ஆண்களில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் கவிஞர் சிநேகன்தான்.

தற்போது பிக்பாஸ் அலை தமிழகத்தில் ஓய்ந்துவிட்டாலும், அதில் நன்றாகவே நடித்த நட்சத்திரங்களுக்கு சினிமாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓவியாவும் சினேகனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை இசையமைப்பாளர் சத்யா தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

படத்தின் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.